tamilnadu

img

வாரணாசியில் அசைவ உணவு விற்பனைக்குத் தடை?

வாரணாசி:
வாரணாசியில் கோயில் களை ஒட்டிய 50 மீட்டர் தொலைவுக்குள் அசைவ உணவு மற்றும் மது விற்பனைக்குத் தடை விதிக்க வாரணாசி மாநகராட்சி முடிவு செய்துள்ளது.உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள வாரணாசி மாநகராட்சியின் கூட்டம், மேயர் மிருதுளா ஜெய்ஸ்பால் தலைமையில் நடைபெற்றது. அப்போது, கவுன்சிலர் ராஜேஷ் யாதவ் என்பவர் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார்.

அதில், ஹரித்துவார் மற் றும் அயோத்தியாவைப் போல, வாரணாசியிலும் கோயிலையொட்டிய 250 மீட்டர் தொலைவுக்குள் அசைவ உணவு, மதுபானம் விற்க,முழுமையாகத் தடை விதிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.அதைத்தொடர்ந்து பேசிய மாநகராட்சி துணை மேயர் நரசிங் தாஸ், “அசைவஉணவு, மதுபானங்களுக்குத் தடைவிதிக்கும் வரைவுத் தீர்மானம் மாநகராட்சி கூட்டத்தில் வைக்கப்படும், தீர்மானம் நிறைவேறியதும், இறுதி ஒப்புதலுக்காக மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.வாரணாசியில் புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் உட்பட 2 ஆயிரம் கோயில்கள் உள்ளன என் பது குறிப்பிடத்தக்கது.

;